இவ் வருடம் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை இலங்கையில் சிறப்பாக நடத்த எதிர்பார்த்துள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், நாட்டில் தற்போது வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சர்வதேச தளம் உருவாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அத்துடன் தேசிய இளைஞர் படையினரால் தம்புள்ளையில் நேற்று இடம்பெற்ற சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வில் பங்கேற்றபோதே அமைச்சர் இதனைக் தெரிவித்தார்.