Welcome to Jettamil

நுவரெலியா பகுதியில் விபத்து, மூவர் படுகாயம்!

Share

நுவரெலியா- திம்புள்ள, கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த மூவர், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கொட்டகலை நகரில் இருந்து பத்தனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில், கொட்டகலை வூட்டன் பசாரில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளில் மோதிய நிலையில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனிலும் மோதியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தூக்கி எறியப்பட்டு படுகாயங்களுக்கு உள்ளானதுடன் மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரும் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்தினால் மோட்டார் சைக்கிள்கள்  மற்றும்  வான் ஒன்றும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அறிய முடிகின்றது.

அந்நிலையில் குறித்த விபத்து தொடர்பான  மேலதிக விசாரணைகளை  திம்புள்ள- பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை