Welcome to Jettamil

பயணப் பொதியில் இருந்த இளம் யுவதியின் சடலம் குறித்து வெளியாகிய தகவல்!

Share

இளம் யுவதி ஒருவரின் தலையில்லாத உடலை பொதியிட்டு கொழும்பு டாம் வீதிக்கு கொண்டு சென்று கைவிட்டுச் சென்றவர் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

குறித்த அந்த சந்தேக நபர் புத்தளம் காவல்துறையை சேர்ந்த உதவி பரிசோதகர் என தெரியவந்துள்ளதுடன் கொலை செய்யப்பட்ட பெண் குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 30 வயதுடையவர் எனவும், இந்த இளம் பெண் சிவனொளிபாத மலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்ட நிலையில் காணாமல் போனதாக அண்மையில் புகாரளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் யுவதியின் சடலம் ஹங்வெல்ல பகுதியில் இருந்து பேருந்து ஒன்றின் மூலம் எடுத்து வரப்பட்டு டாம் வீதியில் வீசிச்சென்றமை சீசீடிவி காணொளியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த அப் பயணப்பொதி தொடர்பில் டாம் வீதி வர்த்தகர்கள் வழங்கிய தகவலை அடுத்து காவல்துறையினர் அதனை சோதனையிட்டபோது அதில் பெண்ணின் உடலம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை