Welcome to Jettamil

பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிள் விபத்து, இளம் குடும்பஸ்தர் பலி!

Share

பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவ் விபத்தின் போது மோட்டார் சைக்கிள் கடலுக்குள் பாய்ந்து உள்ள நிலையில் காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை அப் பகுதியினூடாக பயணித்தவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அவ்விடத்துக்கு விரைந்த போலீஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் பலியான நபர் கற்க்கோவலத்தை சேர்ந்த பவிகரன் (வயது – 30) என்பதுடன் இவர் மாகா வீதி அபிவிருத்தி நிறுவனத்திலும் பணியாற்றி வந்துள்ளார். மற்றும் இவருக்கு மிகச் சிறிய வயது மகன் ஒருவர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை