Welcome to Jettamil

பிரான்ஸ் அரசின் செயலால் குழப்பத்தில் இஸ்லாமியர்கள்…!

Share

வர இருக்கும் ரமலான் பண்டிகை காலம் நெருங்கும் சமயத்தில் இஸ்லாமிய முறைப்படி கோழிகளைக் கொல்வதற்கு பிரான்ஸ் நாட்டில் தடை விதிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் பிரான்ஸ் நாட்டில் வாழும் இஸ்லாமியர்கள் பெரிதும் குழப்பம் அடைந்துள்ளனர்.

பிரான்ஸில் இவ் வருடம் ஜூலை மாதத்தில் இருந்து இஸ்லாமிய முறையில் (ஹலால்) கோழிகளைக் கொல்வதற்கு தடை விதிக்கப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

இஸ்லாமிய ஹலால் முறைப்படி, கோழிகளின் கழுத்திலுள்ள இரத்தக்குழாய் மற்றும் சுவாசக் குழாயை வெட்டி கோழிகள் கொல்லப்படும். இந்த செயல் மனிதத்தன்மையற்றது என்று சில விலங்குகள் நலன் ஆர்வலர்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர்.

இந்நிலையில் ஐரோப்பிய வழக்கம் ஆனது, கோழிகளுக்கு stun gun என்னும் கருவியின் உதவியுடன் அதிர்ச்சி ஏற்படுத்தி அவற்றை செயலிழக்கச் செய்து, அதன் பின்னர் கோழிகளைக் கொல்வதாகும்.

இதற்கிடையில், எந்த முறை பிரயோகம் மூலம் கொல்வது கோழிக்கு அதிகமான வலியை ஏற்படுத்தும் என்று, இன்னமும் கருத்துவேறுபாடுகள் நிலவிய வண்ணம் இருக்கின்றன.

இந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து ஹலால் இஸ்லாமிய முறைப்படி கோழிகளைக் கொல்வதற்கு தடை விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து , இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

குறித்த அறிக்கையில், ரமலான் மாதம் நெருங்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறு பிரெஞ்சு வேளாண்மை மற்றும் உணவு அமைச்சகத்தின் சுற்றறிக்கை இஸ்லாமிய சமூகத்துக்கு எதிர்மறையான செய்தி ஒன்றை அளித்துள்ளது.

குறித்த செயல், மக்கள் மத்தியில் அவர்களுடைய மதத்தை சுதந்திரமாக பின்பற்றுவதிலிருந்து தடுத்து நிறுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளது.

மேலும் , அடிப்படை உரிமைகளை மீட்பதற்காக கூட்டாக இணைந்து சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் கூறியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை