பிரான்ஸ் வாழ் மக்கள் ஜூன் 09 முதல் தங்கள் வெளிநாட்டுப் பயணங்களைத் தொடங்க முடியும்.
வெளிநாட்டு அமைச்சு உலக நாடுகளை அவற்றின் வைரஸ் பரவல் நிலவரத்தின் அடிப்படையில் பச்சை, செம்மஞ்சள், சிவப்பு (green, orange, red) என்ற மூவர்ணங்களில் பிரித்து வரை படத்தை வெளியிட்டுள்ளது.
நிலைமைகளைப் பொறுத்து வரைபடத்தில் மாற்றங்கள் செய்யப்படும்.
பச்சை நாடுகள்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், (European Union, Andorra, Iceland, Liechtenstein, Monaco, Norway, San Marino, Holy See and Switzerland)
மற்றும் ஆஸ்திரேலியா, தென் கொரியா, ஜப்பான், இஸ்ரேல், நியூசிலாந்து,லெப னான், சிங்கப்பூர் போன்றவை பச்சை வர்ண நாடுகள்.
இவை வைரஸ் தீவிரமாகப் பரவாத மற்றும் புதிய திரிபுகளின் ஆபத்து குறைந்த நாடுகளாகக் கணிக்கப்படுகின்றன.
பூரணமாகத் தடுப்பூசி ஏற்றியதற்கான சான்றிதழைக் காட்டி இந்த நாடுகளுக்கு
பயணிக்க முடியும்.
ஆனால் ஊசி போட்ட உடனேயே பயணம் புறப்பட்டுவிட முடியாமல் இருக்கும். ஊசியின் செயற்பாட்டுக் காலத்தைக் கருத்திற் கொண்டு கடைசி ஊசி ஏற்றி இருவாரங்கள் கடந்த பிறகே விமானம் ஏற முடியும். தடுப்பூசி சான்றை டிஜிட்டல் மற்றும் காகித வடிவங்களில் சமர்ப்பிக்கலாம்.
ஊசி ஏற்றாதவர்கள் 72 மணி நேரத்துக்கு முன்னர் எடுக்கப்பட்ட வைரஸ் சோதனை அறிக்கையைக் காட்டிவிட்டு விமானத்தில் ஏறலாம். பெற்றோருடன் செல்லும் பிள்ளைகளுக்கும் அது பொருந்தும்.
பயணிக்கின்ற நாடுகளில் என்ன நடைமுறைகள் பின்பற்றப் படுகின்றனவோ அங்கு அவற்றுக்கு நீங்கள் கட்டுப்படவேண்டியவர்களாக இருப்பீர்கள்.
மஞ்சள் நாடுகள்
உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த மஞ்சள் பிரிவுக்குள்ளேயே இருக்கின்றன. அங்கெல்லாம் கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருந்தாலும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் மரபு மாறிய திரிபுகள் பெருமளவில் பரவாத நாடுகளாகவும் கணிக்கப்படுகின்றன.
சிவப்பு நாடுகள்
கொரோனா வைரசும் அதன் திரிபுகளும் மோசமாகப் பரவிக் கொண்டிருக் கின்ற நாடுகள் சிவப்பு வர்ணத்தில் உள்ளன.