பிக் பாஸ் 4 புகழ் அர்ச்சனா தற்போது விஜய் டிவியின் காதலர் தின ஸ்பெஷல் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக மாறி இருக்கிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முக்கிய தொகுப்பாளராக இருந்து அதன் பின் பிக் பாஸ் 4ல் போட்டியாளராக கலந்துகொண்டவர் அர்ச்சனா. ஜீ தமிழில் இருந்து அவர் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தது.
அதனால் அவர் பிக் பாஸ் முதல் நாளில் வீட்டுக்குள் செல்ல முடியாமல் 10 நாட்களுக்கு பிறகு தான் நில்ட் cஅர்ட் என்ட்ரி ஆக நுழைந்தார்.
பிக் பாஸ் வீட்டில் அவர் லவ் பெட் கேங் சேர்ந்து வைத்துக்கொண்டு ‘அன்பு ஜெயிக்கும்.. அன்பு தான் ஜெயிக்கும்’ என கூறிக்கொண்டு இருந்தார். அதற்காகவே அவரை கடுமையாக பலரும் விமர்சித்தார்கள்.
இந்நிலையில் பிக் பாஸ் முடிந்துவிட்ட நிலையில் அர்ச்சனா விஜய் டிவியிலேயே தொகுப்பாளராக களமிறங்கி இருக்கிறார். அவர் விஜய் டிவியின் வலென்டினெ’ச் டய் ஸ்பெஷலாக ஒரு ஷோவை அர்ச்சனா தொகுத்து வழங்கி உள்ளார்.
அதில் ஆல்யா மானசா, சஞ்சீவ் உள்ளிட்ட பல விஜய் டிவி ஜோடிகள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். காதலே காதலே என இந்த ஷோவுக்கு பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. ஷூட்டிங்கில் எடுத்த சில போட்டோக்களை அர்ச்சனா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.