Welcome to Jettamil

இலங்கைக்கான இங்கிலாந்து அணியின் சுற்றுப்பயணத்தில் யாழ், தமிழ் பெண் சாதனை

Share

இலங்கைக்கான இங்கிலாந்து அணியின் சுற்றுப்பயணத்தில் யாழ், தமிழ் பெண் சாதனை

இலங்கைக்கான இங்கிலாந்து அணியின் சுற்றுப்பயணத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் யுவதி சாதனை படைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட அமுருதா சுரேன்குமார் இங்கிலாந்தின் கழகமட்ட கிரிக்கெட் அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளார்.

2024ஆம் ஆண்டிற்கான சன்ரைஸ் அகடமி குழுவில், 15 வீராங்கணைகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவராகவே அமுருதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் சென் ஜோன்ஸின் முன்னாள் கிரிக்கட் வீரர் இவரின் தகப்பனார். யாழ்ப்பாண பிக் மட்ச் இல் அதிக தனி நபர் ஓட்டங்கள் அடித்த சாதனை அவர் வசம் தான் இன்னமும் இருக்கிறது.

இதற்கமைய நீண்டகால விரிவான தேர்வு செயல்முறையின் அடிப்படையில், குளிர்கால பயிற்சி திட்டத்தில் இத்தேர்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை