எதிர்வரும் ஜீன் 21ம் திகதி காலை 04 மணிக்கு நீக்கப்படும் பயணத்தடை மீண்டும் 23ம் திகதி இரவு 10 மணி முதல் அமுலுக்கு வருகின்றதென அரசு அறிவித்துள்ளது.
மீண்டும் 25ம் திகதி காலை 04 மணி வரை பயணத்தடை தொடர்ந்து அமுலில் இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணத்தடை தளர்த்தப்படும் காலங்களில் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறு மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கள் மற்றும் நிகழ்வுகள், மக்கள் சந்திப்புகள் மற்றும் விழாக்களுக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.