எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டள்ளமையினால் இலங்கையில் மற்றுமொரு பாரிய நெருக்கடி நிலைமை ஏற்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நாட்டில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களும் விலை அதிகரிக்க வேண்டிய நெருக்கடியான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரித்தமையினால் சரக்கு கொள்கலன்களின் போக்குவரத்து கட்டணத்தை நூற்றுக்கு 15 வீதம் அதிகரிப்பதற்கு கொள்கலன் போக்குவரத்து தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அந்த கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்க்பட்டுள்ளதாக கொள்கலன் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ரொஷான் மெனிக்வடுகே தெரிவித்துள்ளார்.
இதனால் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.