Welcome to Jettamil

ஐந்தம்ச கோரிக்கையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கையெழுத்து போராட்டம்!

Share

ஐந்தம்ச கோரிக்கையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கையெழுத்து போராட்டம்

ஐந்தம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடற்றொழிலாளர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் கையெழுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை கடற்றொழிலாளர்களின் நிலைப்பாடு எனும் தலைப்பில் சேகரிக்கப்படும் கையெழுத்துக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

வரைவு கடற்றொழில் சட்டத்தை நிராகரிக்கின்றோம், இலங்கை கடற்பரப்பில் வெளிநாட்டு கடற்றொழில் கப்பல்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதை முற்றுமுழுதாக எதிர்கின்றோம், கடல் உணவு இறக்குமதியால் உள்ளுர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் கடல் உணவு இறக்குமதியை எதிர்க்கின்றோம்,

கடற்றொழில் சமூகத்திற்கு 2024க்கான பாதீட்டில் போதிய ஒதுக்கீடு இன்மையையும் பொருத்தமற்ற அரச கொள்கைகளையும் மாற்றியமைத்து கடற்றொழில் வாழ்வாதாரங்களை மீளக்கட்டியெழுப்ப வேண்டும் என்று கூறுகின்றோம்,கடந்த பல வருடங்களாக இந்திய இழுவைமடி படகுகளால் பாதிக்கப்பட்டுவரும் வட-இலங்கை கடற்றொழில் சமூகங்களுக்கும் நியாயமான தீர்வுகளை முன்னெடுக்குமாறு கூறுகின்றோம் – என்பதே ஐந்து அம்ச கோரிக்கையாகும்.

விவசாய மேன்மை விருது வழங்கல் நிகழ்வும் கண்காட்சியும் -2023

கடந்த பல வருடங்களாக பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் கோவிட் -19 நெருக்கடி கடற்றொழில் சமூகத்தை பெரிதும் பாதித்துள்ளது. இவ்வாறான துயர்மத்தியில் வாழும் கடற்றொழில் சமூகத்தை மேலும் பாதிக்கும் அரச கொள்கைகளை மாற்றி எமது சமூகத்திற்கு விடிவு வழங்குமாறு கேட்டு இம்மகஜரை கையளிக்கிறோம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

காரைநகர் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு 28ஆம் திகதிவரை விளக்கமறியல்!

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை