Welcome to Jettamil

கடனில் சிக்கியுள்ள நாடுகளுக்கு உதவுமாறு அபுதாபி மாநாட்டில் ஜனாதிபதி கோட்டா பகிரங்க கோரிக்கை

Share

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள, கடனில் சிக்கியுள்ள நாடுகளுக்கு உதவுமாறு இந்தியப் பெருங்கடல் நாடுகளின் மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அபுதாபியில் நேற்று ஆரம்பமாகிய ஐந்தாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

இந்தியப் பெருங்கடல் நாடுகளில் புலனாய்வுத் தகவல்களை பகிர்ந்துகொள்வதற்கும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், அதிக ஒத்துழைப்பை வழங்குவதற்கான, ஒரு பிராந்திய பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா வருமானம், வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புதல் மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் ஏற்பட்ட இழப்பு இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதாகவும், தற்போதைய நெருக்கடிகளை சமாளிக்க கடன் வழங்கும் நாடுகள் மற்றும் நிதி நிறுவனங்களின் ஆதரவு தேவை என்றும் இவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அபிவிருத்திக்காக கணிசமான கடன்களை பெற்ற நாடுகள் தற்போது கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றன.

ஏற்கனவே கடன் பொறுப்புகளால் சுமையாக உள்ள இந்த நாடுகள், தொற்றுநோயைச் சமாளிக்க செலவினங்களை அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளன.

இந்த நாடுகளுக்கு உதவுவதில் எந்தவொரு நிறுவனமும் உலகளாவிய பங்கைக் கொண்டிருக்கவில்லை. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றிய போது, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியதும், தொற்று நோயும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் எதிர்கொள்கின்ற மிக முக்கியமான இரண்டு சவால்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தீவிரவாதம், அடிப்படைவாதம், உறுதியற்றநிலை, போதைப்பொருள் கடத்தல், ஆட்சியியல் நடைமுறைகள் குறித்தும், அவர் கவலையளிக்கும் பிரச்சினைகளாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட பிராந்தியத்தில் கடனில் மூழ்கியுள்ள நாடுகளின் சார்பாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் உதவி கோரியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை