Welcome to Jettamil

கழிவுகள் கொட்டும் இடமாகமாறிய பூந்தோட்டம் பொதுச்சந்தை!

Share

கழிவுகள் கொட்டும் இடமாகமாறிய பூந்தோட்டம் பொதுச்சந்தை

வவுனியா பூந்தோட்டம் பொதுச்சந்தையில் கோழிக்கழிவுகளை சிலர் கொட்டுவதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடான நிலைமை உருவாகியுள்ளது.

வவுனியா நகரசபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பூந்தோட்டம் பொதுச்சந்தை கடந்த சிலமாதங்களாக இயங்காத நிலையில் உரிய பராமரிப்பின்றி உள்ளது.

இந்நிலையில் அண்மைய நாட்களாக பொதுச்சந்தை வளாகத்தில் கோழி இறைச்சியின் கழிவுகளை குறித்த சிலர் வீசிச்செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதாரசீர்கேடான நிலைமை உருவாகியுள்ளது.

வீசப்படும் கழிவுகளை மிருகங்கள் பறவைகள் காவிச்செல்வதால் அந்தபகுதியில் துர்நாற்றம் வீசும் நிலையும் காணப்படுகின்றது.

எனவே குறித்த விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை கவனம் செலுத்தி கழிவுகளை வீசுவோர் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுப்பதுடன் சந்தையினை புனரமைத்து மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூந்தோட்டம் பொதுச்சந்தை நீண்ட காலமாக இயங்காத நிலையில் அதற்கு அண்மையில் பல தனியார்
இறைச்சி விற்பனை நிலையங்கள் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை