சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட மூவர்
யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்த தலமையில் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் யாழ்பாண பொலிஸ் போதைதடுப்பு பிரிவினரும் இனைந்து வெவ்வேறு இடங்களில் நடத்திய சுற்றிவளைப்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யபட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 117கால் சாராய போத்தல்களும், 9 முழு சாராய போத்தல்களும் நிலத்தில் புதைக்கப்பட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது கைபெற்றபட்டது.
இவர்கள் யாழ்பாண தலமைபொலிஸ் நிலையத்திற்கு மேலதிக விசாரணைக்காக கொண்டு செல்லபட்டு நீதிமன்றில் முற்படுத்தபடுவார்கள் என பொலிசார் தெரிவித்தனர்.