சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம்பெற்ற திருவாசக விழா
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் வருடாந்த திருவாசக விழா சந்நிதியான் ஆச்சிரமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.
முதல் நிகழ்வாக
செல்வச்சந்நிதியான் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நாயன்மார்களின் திருவுருவங்களும், திருவாசக ஏடுகளும் ஆலயத்திலிருந்து தேவார பாராயணத்துடன் ஆச்சிரமத்திற்கு எடுத்து வரப்பட்டே அங்கு நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.
இதில் அறிமுகவுரையை சொல்லின்செல்வர் ஆசிரியர் இரா.செல்வவடிவேல் நிகழ்ததினார். கலைநிகழ்வுகளாக சிறுப்பிட்டி நாகதம்பிரான் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நடனம் இடம் பெற்றது.
சிறப்பு சொற்பொழிவை உளவள துணையாளர் நா.நவராஜ் நிகழத்தினார்.
திருவாசக பண்ணிசையை இசைநாவரசு m.s.பிரதீபன் வழங்கினார். இதில் அணிசேர் கலைஞர்களாக ஹார்மோனியம் – இசைசுரபி N. செல்வச்சந்திரனும், புல்லாங்குழல் இசையினை நாதவினோதன் K.தேசிகன், மிருதங்கம்- நாதமணி – M.லோகேந்திரன், கெஞ்சிரா- வித்வான் N.கேதாரநாத் அவர்களின் பக்கவாத்தியங்களுடன் இடம்பெற்றது.
இதேவேளை சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிளிநொச்சி மாவட்டத்தின் பூஜாரி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கரியாலை நாகபடுவான் கிழக்கு, கரியாலைநாகபடுவான் மத்தி, குமுழமுனை ஆகிய பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு ரூபா 500000/- பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருள்கள் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன சுவாமிகளால் வழங்கப்பட்டுள்ளன.











