Welcome to Jettamil

நயன்தாராவுக்கு திருமண நிச்சயதார்த்தமா? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!

Share

விக்னேஷ் சிவனுக்கும் – நயன்தாரா நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா? , என்ற கேள்வி தற்போது கோலிவுட்டை சுற்றியும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வழக்கம்போல இந்த தகவல் ஒரு வதந்திதான் என்கிற கூட்டமும் ஒரு பக்கம் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் குழப்பத்துக்கெல்லாம் காரணம் அந்த ஒரு புகைப்படம் தான்.

நயன்தாரா விரலில் அணிந்திருக்கும் மோதிரம் போக்கஸ் செய்தபடி எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தைக் கண்டு நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் ரகசியமாக முடிந்துவிட்டது என்று பல நெட்டிசன்கள் டிஸ்கஷனில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலர் அந்த ஜோடிக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் , இந்த புகைப்படத்தில் யாருடைய முகமும் சரியாக தெரியவில்லை என்பதுதான் பெரும் குழப்பத்திற்குக் காரணம்.

எப்போதுமே நயன்தாராவோடு க்ளிக்கிய பல புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றி இளைஞர்களைக் கடுப்பேற்றும் விக்னேஷ் சிவனின் சமூக வலைத்தள பக்கத்திலும் இந்த புகைப்படம் இல்லையாம்.

சினிமா உலகின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, பொதுவாக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தமாட்டார் என்பது நாம் எல்லோருக்குமே அறிந்த ஒன்று.

இருப்பினும் , அவருடைய பெயரில் ஏராளமான ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதள கணக்குகள் உள்ளன.

அப்படிப்பட்ட ரசிகர்கள் கணக்கில்தான் இந்த புகைப்படமும் இருக்கிறது.

இந்த விடயம் வெறும் வதந்திதான் என்று பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.

கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாகக் காதல் உறவிலேயே இருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் எப்போது என்பதுதான் தற்போது வரை ரசிகர்களின் எதிர்பார்ப்பில் முதன்மையாக காணப்படுகின்றது.

இவ்வாறான புகைப்படங்களை தொடர்ந்து பதிவேற்றி கடுப்பேற்றாமல், விரைவில் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்பது இன்னமும் பலரின் மைண்ட் வாய்சாக காணப்படுகின்றது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை