பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5342 பேர் பாதிக்கப்பட்டதோடு 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரையில் 43,01,925 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1,26,172 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 4,81,598 பேர் அங்குள்ள மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 830 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 36,94,155பேர் பூரண குணமடைந்துள்ளனர்.