Welcome to Jettamil

மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு…

Share

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்கள் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையின் படி, அடுத்த 24 மணி நேரத்துக்குள், கண்டி, நுவரெலிய, மாத்தறை, காலி மாவட்டங்களில், 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில், 100 மில்லி மீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வங்க கடலின் தென்கிழக்கு பகுதியில் காணப்படும் தாழ் அமுக்க நிலை அடுத்த 24 மணிநேரத்தில் தீவிரமடையும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

வலுப்பெறும் இந்த தாழமுக்கம், நாட்டின் வடக்குப்பகுதி கரையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இதனால் கடும் மழையும், 70 கி.மீ வேகம் வரையிலான கடும் காற்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை