Welcome to Jettamil

வட மாகாண அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை…

Share

தீபாவளியை முன்னிட்டு வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தீபாவளி கொண்டாடப்படுவதால், நாளைய தினத்தை சிறப்பு பாடசாலை விடுமுறை நாளாக அறிவிக்க வடக்கு மாகாண ஆளுநரால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாளை வழங்கப்படுகின்ற விடுமுறைக்குப் பதிலாக எதிர்வரும் 13
ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வித் திணைக்களங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளும் நாளை வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை