பேஸ்புக் , வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன திடீரென முடங்கியுள்ளன . இது தொடர்பில் உலகளாவிய ரீதியில் பயனாளர்கள் , டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
நேற்று இரவு முதல் , தமது பேஸ்புக் , வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இயங்கவில்லை என்று பலரும் கூறிவருகின்றனர் . பேஸ்புக் வலைத்தளத்திற்குள் பிரவேசிக்கும்போது , ” மன்னிக்கவும் , நாங்கள் முடிந்தவரை தொழில்நுட்ப சிக்கலை சரிசெய்கின்றோம் ” என்ற செய்தி காட்டப்படுவதாக பயனாளர்கள் கூறுகின்றனர்.
வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன இயங்கினாலும் , தகவல்களை பகிர்ந்து கொள்ளவோ ஏனைய வசதிகளை பயன்படுத்தவோ முடியவில்லை.
முதலாவது முறைப்பாடு பதிவானதை தொடர்ந்து #facebookdown என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது . பயனர்கள் இதன் ஊடாக முறைப்பாடுகளை பதிவிட்டுவருகின்றனர்.
இந்த சிரமத்திற்கு மன்னிப்பு கோருவதாக பேஸ்புக் தகவல் தொடர்பு நிர்வாக இயக்குனர் ஆண்டி ஸ்டோன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கூடிய விரைவாக இயல்பு நிலைக்கு கொண்டவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.