மலையகத் தமிழ் இளைஞர் இந்தியாவில் 03 உலக சாதனைகள்!
இலங்கை மலையகத்தைச் சேர்ந்த இளம் தமிழ் இளைஞர் ஒருவர் இந்தியாவில் இடம்பெற்ற சாதனை நிகழ்வில் மூன்று உலக சாதனைகளை ஒரே நேரத்தில் படைத்து, இலங்கை மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

பொகவந்தலாவ கொட்டியாகலை பகுதியைச் சேர்ந்த திரு. விக்னேஸ்வரன் என்பவரே இந்தச் சாதனைகளைப் படைத்தவர் ஆவார்.
‘Raaga Book of World Records’ ஏற்பாட்டில் இந்தியா சென்று இடம்பெற்ற இந்தச் சாதனை நிகழ்வில், இவர் பின்வரும் மூன்று உலக சாதனைகளைப் பூர்த்தி செய்துள்ளார்

1800 கிலோ கிராம் எடையுடைய ஒரு வாகனத்தை, 45 நிமிடங்களில் கட்டி இழுத்துச் சாதனை படைத்துள்ளார்.
325 புலோக் கற்களைத் தனது நெஞ்சுப் பகுதியில் வைத்து, அவற்றை வெறும் 25 நிமிடங்களில் உடைத்து, தனது வலிமையை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், தொடர்ச்சியாக 24 மணிநேரம் இடைவிடாமல் நடனமாடி, மூன்றாவது உலகச் சாதனையையும் நிலைநாட்டியுள்ளார்.

இலங்கை மண்ணின் புகழை இந்திய நாட்டிற்குத் தெரியப்படுத்திய இந்த மலையக மைந்தனை, மலையக மக்கள் உட்படப் பலரும் வாழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.






