Welcome to Jettamil

இலங்கைக்கு 04 பில்லியன் அமெரிக்க டொலர் சலுகைகள் – இந்தியா தெரிவிப்பு

Share

இலங்கைக்கு அண்மையில் 04 பில்லியன் அமெரிக்க டொலர் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ரசிரா கம்போஜ், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியா தனது அருகிலுள்ள அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறிய அவர், அண்டை நாடாகவும் நெருங்கிய நண்பராகவும் இருக்கும் இலங்கையில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

2017 இல் இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை இணைந்து நிறுவிய வளர்ச்சி ஒத்துழைப்பு நிதியம், 51 வளரும் நாடுகளில் 66 திட்டங்களுக்கு வளர்ச்சி ஆதரவை வழங்கியுள்ளது என்பதையும் அவர் இங்கு வெளிப்படுத்தினார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை