கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட கலவர சம்பவங்கள் தொடர்பில் 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் தாரக பாலசூரியவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய நான்கு சந்தேக நபர்களை கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்கவின் வீட்டை தாக்கிய சந்தேக நபர், பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோவின் வீட்டை தாக்கிய நபர் மற்றும் அவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மாத்தறை உள்ளுராட்சி சபையின் தலைவரின் வீட்டிற்கு சேதம் விளைவித்தமை மற்றும் அலஹெர உள்ளுராட்சி மன்ற தலைவரின் சொத்துக்களை சேதப்படுத்திய இருவர் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.