Welcome to Jettamil

கம்போடியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 14 மாணவர்கள் பலி

Share

கம்போடியாவின் மீகோங் (Mekong) ஆற்றில் மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.

பாடசாலையிலிருந்து வீட்டுக்குச் செல்ல பிள்ளைகள் அந்தப் படகில் ஏறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

படகில் அளவுக்கு அதிகமானோர் பயணம் செய்த நிலையில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

தேடல் மீட்புப் படையினர் இன்னும் ஒரு மாணவரைத் தேடுவதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் 11 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணவர்கள் என்றும், அவர்கள் யாரும் உயிர்க்காப்பு உடைகளை அணியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

படகு உரிமையாளரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

2 மாணவர்களும் படகைச் செலுத்திய இரண்டு பேரும் விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை