யாழ்ப்பாணம் மாதகல் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143ஆவது ஆண்டு நிறைவையொட்டி இன்று காலை நடைபவனியும் அதன் பின்னே வாகன பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.
“தாய்மடியாக இருந்து எமக்கு கல்வியூட்டிய பாடசாலை தாயின் பெருமையினை நாம் எல்லோரும் ஒன்றிணைந்து கொண்டாடி மகிழ்வோம் வாரீர்” எனும் தொனிப்பொருளில் மாதகல் லூர்து அண்ணை ஆலயத்தில் கல்லூரியின் வரலாற்றினை மாணவர்கள் கூத்து மூலம் வெளிப்படுத்தி பின்னர் வாகன பேரணி மாதகலூடாக பண்டத்தரிப்பினை அடைந்து பின்னர் மீண்டும் பாடாசாலையினை வந்தடைந்தது.
இதன்பொழுது பாடாசாலையின் மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள்,அதிபர் என பலரும் கலந்து கொண்டனர்.