15 வயது டைய சிறுமியின் சடலம் ஒன்று கருவலகஸ்வெவ, சியம்பலேவ கிராமத்தில் அவரது வீட்டுக் கிணற்றி லிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கைத்தொலைபேசியில் குறுந்தகவல்கள் பரிமாற்றிக் கொண்ட சிறுமி ஒருவர் ஏதோ ஒரு விடயம் தொடர்பில் மன அழுத்தம் காரணமாக தனது வீட்டுக் கிணற்றில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருவலகஸ்வெவ, டீ.எஸ்.சேனநாயக்க வித்தியால யத்தின் 10ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் தாய் கூலி வேலை செய்து சம்பாதித்த பணத்தில் சிறுமியின் கல்வி நடவடிக்காக கையடக்கத் தொலைபேசி ஒன்றை வாங்கிக் கொடுத்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
தற்போது வரை மேற்கொண்ட விசாரணையில் குறித்த சிறுமி கருவலகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனுடன் இரகசிய காதல் தொடர்பு இருந்ததாகவும்,
குறித்த இளைஞனுடன் குறித்த சிறுமி கடந்த 28ஆம் திகதி இரவும் 29 ஆம் திகதி காலையிலும் குறுந்தகவல்களைப் பரிமாறி கொண்டிருந்ததாகவும்,
அதன் பின்னர் ஏதோ ஒரு விடயம் தொடர்பில் மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸ் விசாரணைகளின் மூலம் உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமியின் உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.