2006 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில், சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 16வது நினைவு நாள், நேற்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக காந்தி சிலை சுற்று வட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திருகோணமலை மாவட்ட உணர்வாளர்களின் பங்களிப்புடன் அமைதியான முறையில் விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
உயிரிழந்த 5 மாணவர்களும் 2005ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதி பெறுபேறுக்காக காத்திருந்த வேளையில், சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தப் படுகொலைகள் தொடர்பாக விசேட அதிரடிப்படையினர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போதும், அவர்கள் பின்னர், போதிய சாட்சியங்கள் இல்லை என விடுதலை செய்யப்பட்டிருந்தனர் .
16 வருடங்களாகியும், மாணவர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.