Welcome to Jettamil

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் 22 இந்திய மீனவர்கள் கைது!

Share

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 22 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (18) மதியம் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் தமிழகம் – பாம்பன் பகுதியில் இருந்து இரண்டு படகுகளில் வந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேரையும் படகுகளுடன் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதான அனைவரும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அவர்கள் நாளை(19) காலை யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பருத்தித்துறை நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை