Welcome to Jettamil

உத்தரகண்ட் பேருந்து விபத்தில் 33 பேர் பலி

Share

உத்தரகண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.

பவுரி கர்வால் பகுதியில் நேற்றுமுன்தினம்  இரவு திருமண விழாவிற்காக 46 பேருடன் சென்ற பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதன்போது, 25 பேர் சடலங்களாக மீட்கப்பட்டதுடன்,  21 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

காயமடைந்த மேலும் 8 பேர் மரணமாகியுள்ளனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை