Welcome to Jettamil

எரிபொருள் கொள்வனவுக்கான 500 மில்லியன் டொலர்  கடன்

Share

எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கையால் கோரப்பட்ட  மூன்றாவது, 500 மில்லியன் டொலர் பெறுமதியான இந்திய கடன் வசதி,  இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் வாங்குவதற்கு மேலும் 500 மில்லியன் டொலர் கடன் கோரியுள்ளோம், ஆனால் அது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று திறைசேரி பிரதிச் செயலாளர் ஆர்.எம்.பி. ரத்நாயக்க தெரிவித்தார்.

முன்னர் பெறப்பட்ட, 1 பில்லியன் டொலர், இந்திய கடன் வசதியின் கீழ் எரிபொருள் வாங்குவதற்கு வழங்கப்பட்ட ஒதுக்கீடு முற்றிலும் தீர்ந்து விட்டதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்திய உதவியுடன் 4 இலட்சம் மெட்ரிக் தொன்  அளவு, பல்வேறு வகையான எரிபொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை