எதிர்வரும் 14ம் திகதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட செல்லும் பொதுமக்கள் வசதிக்காக பஸ்களில் முன்பதிவு கடந்த மாதம் 10 ம் திகதி தொடங்கியது.
ஒரு மாதத்துக்கு முன்பே அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் முன்பதிவு செய்யக்கூடிய வசதி உள்ளது.
வெளியூர் செல்லக்கூடியவர்கள் வருகின்ற 11, 12, 13 ஆகிய நாட்களில் பயணம் மேற்கொள்ள வசதியாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
இவ் 3 நாட்களில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை, திருப்பூர், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல 60 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
சுமார் 1,200 பஸ்களில் பயணம் செய்ய இந்த முன்பதிவு நடந்திருப்பதாக போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்ல 35 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். 3 நாட்களுக்கு இந்த முன்பதிவு நடைபெற்று வருகிறது.
பொங்கல் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற நாட்களில் தொற்றின் பாதிப்பை பொறுத்து பஸ்கள் இயக்குவது குறித்த முடிவை அரசு மேற்கொள்ளும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.