Welcome to Jettamil

இலங்கைக்கு கடத்தவிருந்த 700 கிலோ கடல் அட்டைகள் மண்டபத்தில் சிக்கின

Share

இலங்கைக்கு  கடத்துவதற்காக மண்டபம் அருகே,  பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ கடலட்டைகளை நேற்று மாலை வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

மண்டபத்தையடுத்த வேதாளை  கடற்கரை பகுதியில் இலங்கைக்கு  கடத்துவதற்காக கடலட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த வனத்துறையினர், இலங்கைக்கு  கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட 700 கிலோ கடல் அட்டைகளை கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளின்  மதிப்பு சர்வதேச அளவில் 35 இலட்சம் ரூபாய் என வனத்துறையினர் தெரிவித்துள்ளதுடன், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை