வலுவிழந்தது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் பலவீனமடைந்து வருவதால், நாட்டின் வானிலையில் அதன் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை நிலவும். வாகனச் சாரதிகள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கங்கள் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்க்க மக்கள் தொடர்ந்து முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





