Welcome to Jettamil

முட்டை விலை 30 ரூபாய்க்கும் கீழ் சடுதியாக வீழ்ச்சி

Share

முட்டை விலை 30 ரூபாய்க்கும் கீழ் சடுதியாக வீழ்ச்சி

இலங்கைச் சந்தையில் கடந்த சில வாரங்களாகக் காணப்பட்ட முட்டை விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு முட்டையின் விலை தற்போது சுமார் 30 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் முட்டையொன்று 26 முதல் 28 ரூபாய் வரையான மிகக் குறைந்த விலையிலும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுரசிரி மாரசிங்க இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,

உள்ளூர் முட்டை உற்பத்தி கணிசமான அளவு அதிகரித்துள்ளமையே இந்த விலை வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணமாகும்.

கோழித் தீவனங்களின் விலை குறைவடைந்ததைத் தொடர்ந்து, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பண்ணையாளர்கள் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கியுள்ளனர்.

கேள்விக்கு (Demand) மேலதிகமாகச் சந்தையில் முட்டைகள் விநியோகிக்கப்படுவதால் விலையில் இந்தச் சடுதியான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை