சர்ச்சைக்குரிய யுவான் வாங் 5 சீனக்கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை நாட்டிலிருந்து வெளியேறியுள்ளது. குறித்தக் கப்பல் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 16 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்து சமுத்திரத்தின் வடமேல் கடற்பகுதியில் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் குறித்தக் கப்பல் நாட்டிற்கு வந்திருந்தது எனவும் ஆனால் எரிபொருள் நிரப்புவதற்காக என காரணம் கூறியுள்ளது.
கடந்த 16ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு குறித்த கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் வரை அங்கு நங்கூரமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.