115 கிலோ எடை கொண்ட மீன் வலையில் சிக்கியது! – ரூ. 17 ஆயிரத்திற்கு விற்பனை!
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் வடக்கு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மன்னார் வளைகுடா கடற்பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப்படகு மீனவர்களின் வலையில், 115 கிலோகிராம் எடை கொண்ட மிகப் பிரமாண்டமான மீன் ஒன்று சிக்கியுள்ளது.
பிடிபட்ட மீன், சுமார் 3 மீட்டர் நீளம் கொண்ட மஞ்சள் வால் கேரை மீன் ஆகும். இதன் எடை 115 கிலோகிராம்.
50 இற்கும் அதிகமான நாட்டுப்படகுகளில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் தென்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.
இந்த மீன், பாம்பன் அந்தோனியார்புரம் பகுதியைச் சேர்ந்த கிளிண்டன் என்பவருக்குச் சொந்தமான படகில் சிக்கியுள்ளது.
மீனவர்களின் எதிர்பார்ப்பை விஞ்சிய இந்த பெரிய மீன், 17,000 இந்திய ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





