Welcome to Jettamil

இணையவழி வாசிப்பை ஊக்குவிக்கும் ஒன்றுகூடல்!

Share

இணையவழி வாசிப்பை ஊக்குவிக்கும் ஒன்றுகூடல்!

வாசிப்பு மாதத்தையொட்டி கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிகழ்வுகள் வரிசையில் இன்றைய (29.10.2025) நிகழ்வு இணைய வழி வாசிப்பை ஊக்குவிப்பதாக முன்னெடுக்கப்பட்டது.

கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி அமைச்சில் செயற்படுத்தப்படும் Room to Read செயற்றிட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் காரைக்கவி கந்தையா பத்மானந்தன் அதிதி பேச்சாளராக கலந்து கொண்டார்

இணைய வழி அறிவுத் தேடலின் முக்கியத்துவம் பற்றிய ஆவணக் காணொளியை விசேட கல்வி ஆசிரிய மாணவி நுஸ்லா சாஜஹான் காட்சிப்படுத்தினார்.

தமிழ்த்துறை விரிவுரையாளர் வேல் நந்தகுமார் அதிதிக்கான அறிமுக உரையை ஆற்றினார்.

இணைய வழி வாசிப்பு என்ற தலைப்பில் இரண்டாம் வருட உடற்கல்விநெறி ஆசிரிய மாணவி உசாந்தினி விமல்ராஜ் உரை ஆற்றினார்.

வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக அனைவருக்கும் நூல்களை அன்பளிப்பாக வழங்கினார்.

அதிதி காரைக்கவி கந்தையா பத்மானந்தன் அவர்கள் கலாசாலை முகாமைத்துவ குழுவினரால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை