இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மாபெரும் பொங்கல் திருவிழா
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மாபெரும் பொங்கல் திருவிழாவானது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
1008 பொங்கல் பானையுடன் ,1500 பரத நாட்டிய கலைஞர்களுடன்,500 கோலங்களுடன் இடம்பெற்ற பொங்கல் விழாவானது நேற்று (08) திருகோணமலையில் நடைபெற்றது.
பொங்கல் விழாவை முன்னிட்டு இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியையும் மற்றும் படகோட்ட போட்டி, சிலம்பம், கபடி போட்டிகளையும் கிழக்கு மாகாண ஆளுநர் நடத்தியிருந்தார்.