Welcome to Jettamil

இந்தியாவின் பீகார் மாநிலம் போத்கயாவில் உள்ள காய்கறி சந்தையில் பெரும் தீ விபத்து

Share

இந்தியாவின் பீகார் மாநிலம் போத்கயாவில் உள்ள காய்கறி சந்தையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீயினால் 100க்கும் மேற்பட்ட கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தீ பரவியதன் பின்னர் சில கடைகளில் உள்ள பல எரிவாயு சிலிண்டர்களும் வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த திடீர் தீயினால் 6 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

தீயினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை மற்றும் பீகார் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை