Welcome to Jettamil

எமது தலைவர்களின் இரத்தத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது – மொஜ்தபா கமேனி எச்சரிக்கை

Share

எமது தலைவர்களின் இரத்தத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது – மொஜ்தபா கமேனி எச்சரிக்கை

ஈரானின் முக்கிய அதிகாரி லாரிஜானி இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பழிவாங்கப்படும் என மொஜ்தபா கமேனி பகிரங்கமாகச் சபதமேற்றுள்ளார். “இந்தக் கொடூரமான குற்றத்தைச் செய்தவர்கள் தப்பிவிட முடியாது; இதற்காக அமெரிக்காவும் இஸ்ரேலும் மிகப்பெரிய விலையைக் கொடுத்தே ஆக வேண்டும்” என அவர் எச்சரித்துள்ளார்.

லாரிஜானியின் மரணத்திற்குப் பின்னால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பாரிய சதி இருப்பதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது. ஏற்கனவே மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், மொஜ்தபா கமேனியின் இந்த நேரடி எச்சரிக்கை பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

ஈரானின் அடுத்தகட்ட நகர்வு ஒரு பாரிய ஏவுகணைத் தாக்குதலாக இருக்கலாம் என இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

லாரிஜானி போன்ற ஒரு முக்கியப் பாதுகாப்பு ஆலோசகரின் இழப்பு ஈரானுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள போதிலும், அதனை ஈடுகட்ட ஈரானியப் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தயாராகி வருகின்றது.

“எமது தலைவர்களின் இரத்தத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது” என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை போரின் போக்கை மாற்றக்கூடும் என அஞ்சப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை