Welcome to Jettamil

சீனாவில் பரவும் புதிய வகை வைரஸ்! உலக நாடுகளில் அச்சம்!

Share

சீனாவில் பரவும் புதிய வகை வைரஸ்! உலக நாடுகளில் அச்சம்!

கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவில் பல புதிய வைரஸ்கள் பரவி வருகின்றன என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Human Metapneumovirus (HMPV) எனப்படும் வைரஸ் பரவலாக காணப்படுவதாகவும், இதன் பாதிப்புக்குள்ளானவர்கள் கொவிட்-19 தொற்றினாலும் பாதிக்கப்பட்டவர்கள் ஆக இருக்கின்றனர் என்றும் கூறப்படுகின்றது.

மேலும், சீனாவில் இன்ஃபுளுவென்சா (Influenza) வைரஸும் பரவி வருகிறது.

சீனாவில் வைரஸின் பரவல் வேகமாக உணரப்படுவதாகவும், சமூக ஊடகங்களின் மூலம் தற்போதைய நிலையைப் பற்றி அறிந்துகொள்ள முடிகின்றதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இவை காரணமாக, சீனாவின் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி விடுவதாக கூறப்படுகிறது.

இந்த பரவலின் சூழலில் சீனாவில் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இருப்பினும், இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.

இத்தொடர்பாக சீன அதிகாரிகள் எவ்வித அறிக்கையையும் வெளியிடவில்லை.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை