Friday, Jan 17, 2025

எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

By kajee

எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் மூன்று நாட்கள் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கலைவாணி வீதியே துணைவி சங்கரத்தை பகுதியை சேர்ந்த சிறீஸ்காந்திராசா சிவாஸ்கர் (வயது 34) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவருக்கு கடந்த 21ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் 32ஆம் திகதி சங்கானை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

யாழ்ப்பணம் போதனை வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். எலிகாய்ச்சல் காரணமாகவே குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு