Sunday, Jan 19, 2025

சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இளைஞரொருவர் சடலமாக மீட்பு!

By kajee

சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இளைஞரொருவர் சடலமாக மீட்பு!

நேற்றையதினம் சாவகச்சேரி – நுணாவில் பகுதியில் 29 வயதான இளைஞரொருவர் தூக்கிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் தமது முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் சாவகச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. சாவகச்சேரி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சீ.சீ.இளங்கீரன் விசாரணைகளை மேற்கொண்டதுடன், உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சட லத்தை உறவினரிடம் கையளிக்குமாறும் உத்தரவிட்டார்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு