இன்று மதியம் கரவெட்டி நெல்லியடி நாவலர் மடம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் நால்வர் படு காயமடைந்துள்ள நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிவந்த வர்த்தக கன்ரர் ரக வாகனமும், நெல்லியடி பலுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனமும் மோதிக்கொண்டதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த வர்தக நோக்காக வந்த கன்ரர் ரக வாகனம் முன்னால் திடீரென திரும்பிய கார் ஒன்றை காப்பாற்ற முற்பட்டு தனது பக்கத்திலிருந்து எதிர் பக்கம் நோக்கி தனது வாகனத்த செலுத்திய வேளை பருத்தித்துறை பக்கமிருந்து யாழப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் மோதியதில் ஹயஸ் ரக வாகனத்தில் வந்த மூவரும் கன்ரர் வாகனத்தை செலுத்திவந்த சாரதியும் காயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் வெளிநாட்டிலிருந்து வருகைதந்திருந்த இலங்கையர்களான அஸ்ரிபன் அடினா, அஸ்ரிபன் சாரங்கா அன்ரனி ஜொக்சன் பென்னாண்டோ ஆகியோரும், அம்பிகைபாலன் செந்தூரன் எனும் கன்ரர் வாகன சாரதியுமே காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளே நெல்லியடி பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்