Welcome to Jettamil

அடுத்த மாதம் 4 எரிபொருள் கப்பல்களை இந்தியாவில் இருந்து வரவழைக்க நடவடிக்கை

Share

கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் வகையில், அடுத்த மாதம் இந்தியாவில் இருந்து நான்கு கப்பல்களில் எரிபொருள் எடுத்து வரப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றில், இரண்டு டீசல் கப்பல்களும், இரண்டு பெட்ரோல் கப்பல்களும், அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் வசதியின் கீழ் இந்தியாவிடம் இருந்து அண்மையில் எரிபொருள் வாங்கியதைப் போலல்லாமல், பணம் செலுத்திய பின்னர், எரிபொருள் கொண்டு வரப்படும் என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை,  இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகம் அவசர அடிப்படையில், அதிகளவான பெட்ரோல் மற்றும் டீசலை வழங்குமாறு, திங்கட்கிழமை விடுத்த கோரிக்கைக்கு புதுடில்லி சாதகமாக பதிலளித்துள்ளது.

இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட, இந்திய எரிசக்தி அமைச்சர் பூரியைச் சந்தித்து அவசர அடிப்படையில் எரிபொருள் வழங்குமாறு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை