நடிகை சித்ராவின் தந்தை எடுத்த முடிவு.!
நடிகை சித்ராவின் தந்தை, காமராஜ், இன்று தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தன் மகள் சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்குப் பிறகு மன அழுத்தத்தில் இருந்து வந்த அவர், இன்று சென்னையின் திருவான்மியூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கு நீடித்து வரும் நிலையில், நீதிமன்றம் ஹேமந்தை குற்றவாளி அல்ல என்று தீர்ப்பளித்து, அவர் விடுவிக்கப்பட்டார். இந்த விடுதலை சித்ராவின் தந்தை மீது மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஓய்வுபெற்ற காவலராக இருந்த காமராஜ், இப்போது தூக்கிட்டு இறந்த நிலையில், அவரது சடலம் வீட்டில் மீட்கப்பட்டுள்ளது. 2020 டிசம்பரில் சித்ரா பூவிருந்தவல்லி அருகே விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவான்மியூர் போலீசார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.