Welcome to Jettamil

அமரகீர்த்தி அத்துகோரள கொலை வழக்கு: கம்பஹா மேல் நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!

Share

அமரகீர்த்தி அத்துகோரள கொலை வழக்கு: கம்பஹா மேல் நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகஸ்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு குறித்து கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று (14.01.2026) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2022 மே மாதம் 9 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பின் போது, நிட்டம்புவ பகுதியில் வைத்து போராட்டக்காரர்களால் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்க்காப்பாளர் ஜயந்த குணவர்தன ஆகியோர் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 41 சந்தேகநபர்களுக்கு எதிராகக் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

நீண்டகாலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கம்பஹா மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் வழக்கினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை