நீதிமன்றத்தில் சரணடைந்தார் விமல் வீரவன்ச!
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கத் தவறியதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, சற்று முன்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, தனது வருமானத்திற்கு மேலதிகமாக சுமார் 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களைச் சட்டவிரோதமான முறையில் சேர்த்ததாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதனைத் தொடர்ந்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விமல் வீரவன்சவைக் கைது செய்யப் பிடியாணை பிறப்பித்தார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, விமல் வீரவன்ச தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திற்கு வருகை தந்து நேரடியாக முன்னிலையாகியுள்ளார்.





