Thursday, Jan 16, 2025

தென்மராட்சி வலயப் பாடசாலைகள் இணைந்து நடத்தும் கல்விக் கண்காட்சி!

By kajee

தென்மராட்சி வலயப் பாடசாலைகள் இணைந்து நடத்தும் கல்விக் கண்காட்சி!

தென்மராட்சி வலயப் பாடசாலைகள் இணைந்து நடத்தும் கல்விக் கண்காட்சி நிகழ்வு 20/11 புதன்கிழமை காலை 10மணிக்கு சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கி.கமலராஜன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கல்விக் கண்காட்சி நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக பௌதீகவியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் தி.பத்மதாஸ் கலந்து சிறப்பித்திருந்தார்.

மேலும் நிகழ்வில் தென்மராட்சிப் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மாணவர்களுடைய கல்விக் கண்காட்சி நிகழ்வைப் பார்வையிட்டிருந்தனர்.

மேற்படி கண்காட்சி நிகழ்வானது 21/11 வியாழக்கிழமை பிற்பகல் 3மணி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு