Welcome to Jettamil

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

Share

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் இயற்கை எரிவாயு மற்றும் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இயற்கை எரிவாயுவின் விலை இன்றையதினம் (19) 2.70 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.6 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

மேலும் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.10 அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் காரணமாக ஆசியப் பிராந்தியங்கள் பாதிக்கப்படலாம் என சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கையின் பொருளாதாரமும் பாதிக்கப்படலாம் என அவர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை